ரஜினிக்கு சார்க்கு கதை எழுத விஜய் எனக்கு மோட்டிவேட் செய்தார் என கூறியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.
தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளதாவது, “விஜய் என்னிடம் ரஜினிக்காக ஸ்கிரிப்டை தயார் செய்யுமாறு பீஸ்ட் பட ஷூட்டிங்கின்போது கூறினார். அதற்கு நான் தயங்கிய போதும் அவர் என்னை ஊக்குவித்தார். இதைத் தொடர்ந்து ரஜினி சாரின் 169 திரைப்படத்தின் கதையை எழுதினேன்” என்று கூறியுள்ளார்.