Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி முடிந்தது… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி ஸ்டார் மியூசிக் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலி விருதில் சிறந்த நிகழ்ச்சிக்கான விருது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

startmusic hashtag on Twitter

இந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடில் குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் கலந்து கொண்டு அனைத்து சுற்றிலும் பணத்தை வென்று சாதனை செய்தனர். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியோடு ஸ்டார்ட் மியூசிக் 2 முடிவடைந்துவிட்டதாக தொகுப்பாளினி பிரியங்கா தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் .

Categories

Tech |