Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வரப்போகுதா?… பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் . இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்படவுள்ளது .

இந்நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. பிக்பாஸ் ஜோடி என்ற இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இதில் கேபி, ஜூலி, பாலா, பாத்திமா பாபு, சம்யுக்தா, சோம் உள்ளிட்டோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |