விஜய் டிவி பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது .
இதில் பிக்பாஸ் பிரபலங்கள் கேபி, ஆஜித், சோம், சிவானி, ஜூலி, மோகன் வைத்யா, பாத்திமா பாபு, நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர் . மேலும் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.