விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்துள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண்பிரசாத் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். கடந்த வருடம் பாரதி கண்ணம்மா சீரியலை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதாவது தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கண்ணம்மா கையில் ஒரு பையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருப்பார். சுமார் ஒரு வாரம் வரை ஒளிபரப்பாகிய இந்த காட்சிகளை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியானதால் இந்த சீரியலுக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்தது . இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.