Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது..! “விஜய் டிவி பிரபலம் புகழுக்கு இப்ப நடந்தது முதல் திருமணம் இல்லையா….??” அப்ப முதல் திருமணம் எப்போ…?????

விஜய் டிவி பிரபலம் புகழுக்கு தற்பொழுது நடைபெற்ற திருமணம் இரண்டாவது திருமணமாம்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் ஆகஸ்ட் 1-ம் தேதி தனது காதலியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள். இந்நிலையில் அண்மையில் புகழுக்கு நடைபெற்ற திருமணம் இரண்டாவது திருமணமாம். ஒரு வருடத்திற்கு முன்பே புகழும் பென்சியாகவும் பதிவு திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. கோவையில் இருக்கும் பெரியார் படிப்பகத்தில் இருவரும் சென்ற வருடம் பதிவு திருமணம் செய்துள்ளார்கள். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்ற வருடமே இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளார்கள். தற்பொழுது பெற்றோர்கள் சம்மதித்ததால் முறைப்படி அனைவரையும் அழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

Categories

Tech |