விஜய், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடிப்பதற்கு ஆவலாக உள்ளதாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்று பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார்.
இனி வரும் காலங்களில் பான் இந்திய படங்கள் தான் அதிகம் வர உள்ளன. எனவே தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தப் போவதில்லை. குறிப்பாக தமிழில் தனுஷ் நடித்த அசுரன், விஜய் நடித்த மாஸ்டர் படங்கள் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எனவே தமிழ் நடிகருடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.