வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் மூலமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவவை இவர் காதலிப்பதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு தற்போது சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் இராஷ்மிகா இணைந்து நடித்த போது காதல் மலர்ந்ததாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் அடுத்து வந்த நிலையில் விஜய் தேவரகொண்டா உடனான காதல் வதந்தி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ராஷ்மிகா “இது ஒரு க்யூட் வதந்தி” என்று பதிலளித்துள்ளார். இவருடைய பதில் ரசிகர் மத்தியில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது