விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவும் காதலிப்பதாக பிரபல நிகழ்ச்சியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை அனன்யா பாண்டே.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிரபல டிவி நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் அனன்யா பாண்டே மற்றும் விஜய் தேவரகொண்டா பங்கேற்றனர். அப்பொழுது கரண் பல கேள்விகளை கேட்க இருவரும் பட பட வென பதில் அளித்துள்ளனர்.
அனன்யா பாண்டே இந்நிகழ்ச்சியில் , விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகாவை காதலிப்பதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார். சென்ற சில வருடங்களாகவே இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவி வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அனன்யா பாண்டே குறிப்பிடத்தக்கது.