விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் குறித்து முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற வதந்தி பரவி வந்தது.
இதற்கு விஜய் தேவரகொண்டா மீண்டும் முட்டாள்தனமான செய்தி, இதில் உண்மையே இல்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா மந்தனாவும் இது குறித்து கூறியுள்ளார். அதாவது இது டைம் பாஸுக்காக செய்கின்ற ஒரு வதந்தி. எனக்கு திருமணம் செய்ய இன்னும் நேரம் இருக்கின்றது. திருமணத்திற்கான நேரம் எப்பொழுது வருகின்றதோ அப்பொழுது செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.