விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ரோனிட் ராய், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
This man is love ❤️
Every moment I am making memories! And this one will forever be special..#Liger Vs The Legend..
When I came face to face with Iron @MikeTyson pic.twitter.com/F2QRpIaitS
— Vijay Deverakonda (@TheDeverakonda) November 16, 2021
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தனிஷ்க் பக்சி இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் வில்லனாக நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. தற்போது படப்பிடிப்புக்காக லைகர் படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்கு விஜய் தேவர்கொண்டா, மைக் டைசன் மோதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா, மைக் டைசன் இருவரும் லைகர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.