விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியானது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார்.
#Beast Sun tv exclusive #ThalapathyVijay & Beast team interview shoot done today… planning to telecast on April 10th night…#BeastFromApril13
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 28, 2022
படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இப்படத்தில் இருந்து வெளியாகிய பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் புரமோஷன் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக செய்தி வந்திருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினரும் விஜய்யும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகின்றது. இந்நிகழ்ச்சியானது ஏப்ரல் 10-ஆம் தேதி ஒளிபரப்பப்படும் என்ற செய்தி வெளிவந்திருக்கின்றது.