Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏன்?… ரசிகர்கள் ஆதங்கம்… காரணம் இதுதானா?…!!!

விஜய் படங்களுக்கு மட்டும் விருதுகள் கிடைக்காமல் இருப்பது ஏன்? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் .

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் குறிப்பாக அசுரன், ஒத்த செருப்பு, விஸ்வாசம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் கிடைத்தது. இந்நிலையில்  விஜய்யின் படங்களுக்கு மட்டும்  விருதுகள் கிடைக்காமல் இருப்பது ஏன்? என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் .

7 Movies that Made Vijay a real 'Thalapathy'

கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பெண்களின் முன்னேற்றத்திற்கான படமாகவும் இந்த படத்தை பார்த்த பல பெண்கள்  தன்னம்பிக்கை அடைந்திருக்கிறார்கள் எனவும் இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு ஏன்  விருது கிடைக்கவில்லை? எனவும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதற்கு காரணம் விஜய் தனது படங்களில் அரசுக்கு எதிரான வசனங்களையும், கருத்துக்களையும் வைத்திருப்பதால் அவரது படங்கள் விருதுகளுக்கான பரிசீலனையில் கூட இடம் பெறுவதில்லை எனவும் சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |