அஜ்னபி படம் மூலம் நடிகையானவர் பிபாஷா பாசு. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிபாஷா, விஜய்யின் சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகையும் தமிழில் சச்சின் பட நாயகி மான பிபாஷா பாசு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரது கணவர் கரன்சிங் குரோவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இது எங்களுக்கு ஒரு புதிய கட்டம். இரண்டு பேர் மட்டுமே அன்பை பரிமாறிக் கொண்டிருந்தோம்.
தற்போது அது மூன்றாக மாறப்போகிறது. நம் அன்பால் வெளிப்பட்ட படைப்பு இது”என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு இவர் கர்ப்பமாகியுள்ளதை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளார்.