Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் பற்றி செல்வராகவன் சொன்னது சரிதான்”… கூறும் ரசிகர்கள்…!!!!

விஜய் பற்றி செல்வராகவன் சொன்னது சரிதான் என்கிறார்கள் ரசிகர்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக பூஜா கெக்டே நடிக்க வில்லனாக செல்வராகவன் மிரட்ட இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் வீரராகவன் என தகவல் வெளியானது.இந்த திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்த புரோமோவில் விஜய் வில்லங்கமாகவே பேசுகின்றார்.

இதைப் பார்த்த ரசிகர்களோ செல்வராகவன் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது என்கிறார்கள். செல்வராகவன் கூறியுள்ளதாவது, அவன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண கூடாதுன்னு மினிஸ்டர் சொன்னாருன்னு மிரட்டி சொல்லியா என்று செல்வராகவனிடம் அமைச்சர் சொல்லுவார். அதற்கு செல்வராகவன், அவன்கிட்ட மினிஸ்டர் மிரட்டுனாருன்னு சொன்னா அப்புறம் உங்க பொண்ணு பொண்டாட்டிய அவன் கொன்னுட்டு டெரரிஸ்ட் தான் கொன்ன மாதிரி செட் பண்ணி வச்சிடுவான்  என்பார். இந்நிலையில் விஜய் வில்லங்கமான ஆள் என்று செல்வராகவன் சொன்னது ப்ரோமோ வீடியோவில் உறுதியாகியுள்ளது.

Categories

Tech |