நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஹச். வினோத் இயக்க போனிகபூர் தயாரித்தார். இந்நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல்களையும், பின்னணி இசையை ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஆரம்பமாக உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் அஜித்தின் மாணவனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விஜய் பாணியில் அஜித்தும் கல்லூரி ஆசிரியராக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.