Categories
மாநில செய்திகள்

விஜய் போஸ்டரால்….அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு….!!!!

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் பீஸ்ட் பட அப்டேட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், மதுரை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றிய போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில் 2026இல் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும்  மேலும் விஜய் முடிவெடுத்தால் முதல்வர்தான் என குறிப்பிட்டுள்ளனர். இது தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதில் 2021 முதல்வர் ஸ்டாலின் என்றும் 2026ல் முதல்வர் விஜய் என்றும்  மறைமுகமாக குறிப்பிடும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த போஸ்டரின் மற்றொரு புறத்தில், 2026 அரசியல் ஆலோசகர், தளபதி மக்கள் இயக்கம், தமிழ்நாடு என பிரசாந்த் கிஷோரின் போட்டோவும் போடப்பட்டுள்ளது.

விஜய், பிரசாந்த் கிஷோரை சந்தித்தது பிரச்சனையாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் போஸ்டரில் பிரசாந்த் கிஷோரின் போட்டோ இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து விஜய் முடிவு எடுப்பாரா? என்று ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |