Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் மகன் சஞ்சய் விவகாரம்”…. ட்விட்டரில் விளக்கம்…!!!!!

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலுக்கு விஜய் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் பெயரில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கணக்கு இருக்கின்றது. அதில் விஜய்யின் குடும்ப புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றது. மேலும் புகைப்படங்களை வெளியிட்டு ஜேசன் அது பற்றி விளக்குவார். இதை பார்த்த ரசிகர்கள் பரவாயில்லை ஜேசன் இவ்வளவு ஆக்டிவாக இருக்கின்றார் என நினைத்த நிலையில் தற்போது இணையத்தில் கணக்கு வைத்திருப்பது ஜேசன் சஞ்சய் இல்லை என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுப்பற்றி விஜய் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சமூக வலைத்தளத்தில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். அதனால் போலி கணக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறியிருக்கின்றனர். ஜேசன் சஞ்சய் மட்டுமல்லாமல் அவரின் தங்கை திவ்யா ஷாஷா பெயரிலும் போலி கணக்குகள் இருக்கின்றது. ஜேசன் பெயரில் போலி கணக்குகள் இருப்பது குறித்து முன்பே எச்சரிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |