Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மகன் ஹீரோவா…? இயக்குனரா…? விளக்கம் கொடுத்த இயக்குனர்…!!

விஜய் மகன் சஞ்சய் கதாநாயகன் ஆவாரா அல்லது இயக்குனராக ஆவாரா என்பது அவர் வந்த பின்பே தெரியுமென இயக்குனர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் வாரிசுகள் திரைக்கு அறிமுகமாவது அப்படி ஒன்றும் புதிய விசயமில்லை. இதற்கு முன்னே கார்த்திக், பிரபு முதல் பல  நடிகர்களின் மகன்கள் மூன்று தலைமுறை தொடர்ந்து  ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். நடிப்பு பலம் இல்லாமல் கூட  தமிழ் சினிமாவில் தங்களது வாரிசுகளை திரைக்கு அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆதித்ய வர்மா படத்தின்  மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் திரைக்கு அறிமுகமாகி தற்போது நாயகன் ஆகி விட்டார். துருவை தொடர்ந்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய் திரைக்கு நடிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் இடையில் அதிகமாக உள்ளது.

அதற்குத் ஏற்றவாறு, கனடாவில் திரைத்துறை சம்பந்தமான படிப்புகளை படித்து வரும் சஞ்சய் இடைப்பட்ட காலங்களில் குறும்படங்களிலும் நடித்து வருகிறார். இதனால், சஞ்சய் மாஸ்டர் படத் தயாரிப்பளாரான பிரிட்டோவின் அடுத்த படத்தில் சஞ்சய் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் புது பட வேலைகள் ஆரம்பமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி தவறானது என பிரிட்டோ கூறியுள்ளார். அவர் இதை பற்றி கூறுகையில், “புதுப்படத்தில் சஞ்சய் நடிக்கப்போவதாக எந்த ஒரு பேச்சும் இதுவரை நாங்கள் பேசினதில்லை.

விஜயின் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் திரைத்துறைக்கான படிப்பை படித்து வருகிறார். ஆனால் அவருக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை தான் உள்ளது. இருந்தாலும் அவர் படிப்பை  முடித்து வந்த பிறகு தான் ஹீரோவாக வருவாரா ? இல்லை இயக்குனராக  ஆவாரா? என்பது அவருக்கு தெரியும். இப்பொழுது வரை நானும் விஜய்யும் கூட இதைப் பற்றி பேசிய கொண்டது இல்லை” என பிரிட்டோ தெளிவாக கூறியுள்ளார். மேலும் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் ஓடிடி-யில் வெளியிடவில்லை என்றும், எத்தனை  நாள்கள் ஆனாலும் தியேட்டர் திறந்த பிறகே இந்த படம் ரிலீசாகும்” எனவும் பிரிட்டோ உறுதியாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |