Categories
சினிமா மாநில செய்திகள்

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம்….. காணொலி வாயிலாக நடிகர் விஜய் சந்திப்பா?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை காணொளி வாயிலாக நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் அடுத்த பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

அதன்படி மாவட்ட தலைவர், மாவட்டச் செயலாளர் என ஒரு மாவட்டத்திலிருந்து ஆறு நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் படபிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள நிலையில் அவர் நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி வாயிலாக சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |