சென்னையில் இளம்பெண் ஒருவர் மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்து அசத்தியுள்ளார்.
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாஸ்டர். அந்தப் படத்தில் மாளவிகா மேகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த படம் வெளியிடப்பட்டாலும் கொரோனா பரவல் காரணமாக சில நாடுகளில் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதனால் வெளிநாட்டிலுள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மலேசியாவில் இருக்கும் ஆஷ் என்ற பெண் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்காக ஒரு திரையரங்கை புக் செய்துள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகின்றார். அவர் விஜய்யின் தீவிர ரசிகை. மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்காக பல முறை சென்னை வர முயற்சித்துள்ளார். ஆனால் கொரோணா பரவல் காரணமாக அவர் சென்னை வர முடியாமல் இருந்தது. இருந்தாலும் கடும் முயற்சி செய்து சென்னை வந்த அவர், ஒரு வேலையாக மாஸ்டர் படம் பார்க்க திரையரங்கு சென்று அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவருக்கு அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள 150 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்து உள்ளார். இதனையடுத்து சென்னையில் உள்ள தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் திரையரங்குக்கு அழைத்துச் சென்று படம் பார்த்து ரசித்துள்ளார்.
அதன் பிறகு திரை அரங்குக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முன்பு நின்று விஜய் கத்துவதை போல போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதுபற்றி அவர் கூறும்போது, மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே மலேசியாவில் இருந்து சென்னை வந்தேன். அங்கிருந்து பறந்து வந்ததாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.