தளபதி விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவற்றில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். இப்படத்துக்கு பின் விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். முன்பே மாஸ்டர் திரைப்படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து அண்மையில் வெளியாகிய விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால், விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் எனவும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க உள்ளதால், ஒவ்வொரு மொழியிலிருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வுசெய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன் வாரிசு படத்தின் அப்டேட் வெளிவராமல் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிட முடியாது என்றும் இவ்வளவு நாட்கள் காத்திருந்த ரசிகர்கள் இன்னும் ஓரிருமாதங்கள் காத்திருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.