Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களே… ஹேப்பி நியூஸ்…! வெளியாகப் போது பீஸ்ட் “அரபி குத்து”…. “இன்னொரு வாட்டி போடுங்க”….!!

பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபி குத்து பாடலை படக்குழுவினர்கள் விஜயிடம் போட்டுக்காட்டியுள்ள நிலையில் அதனை எழுதிய சிவகார்த்திகேயனை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகரான விஜய், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த அதிரடி கலந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் கட்டாயமாக வெளியிடுவோம் என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபி குத்து பாடல் இன்று வெளியாகப் போவதாக படக்குழுவினர்கள் ப்ரோமோவுடன் அறிவித்துள்ளார்கள்.

அதாவது இயக்குனர் நெல்சன் அனிருத் சிவகார்த்திகேயன் போன்றோர் கலகலப்பாக இடம்பெற்ற ப்ரோமோவை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்த ப்ரோமோவில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடலை படக்குழுவினர்கள் விஜயிடம் தொலைபேசி வாயிலாக போட்டுக் காட்டியுள்ளார்கள். இதனை கேட்ட விஜய் மீண்டும் ஒருமுறை போடுங்கள் என்று சொன்னபடி கேட்டு வருகிறாராம். மேலும் விஜய் அரபி குத்து பாடலை எழுதிய சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Categories

Tech |