விஜய் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு 48 பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இயக்குனர் சந்திரசேகரரின் மகனான விஜய் ஆரம்ப காலத்தில் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது நடிக்க வேண்டாம் என மறுத்துள்ளார் எஸ்.ஏ.சி. விஜயின் விடாப்பிடியான செயலால் சந்திரசேகரர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
விஜய்க்கு எடுத்த உடனே கஷ்டமான காட்சியை கொடுத்தால் அவர் கண்டிப்பாக நடிக்க மாட்டார் என எண்ணி பக்கம் பக்கமாக வசனங்களை எழுதிக்கொடுத்தார். ஆனால் விஜய்யோ ஒரே டேக்கில் அதை ஓகே பண்ணி விட்டார். இதைப் பார்த்த படக்குழுவினர் அசந்துபோனனர். எஸ்.ஏ.சந்திரசேகரர் அடுத்தடுத்து திரைப்படங்களில் விஜய் நடிக்க வைத்து முன்னேற்ற வேண்டும் என தீவிரமாக களமிறங்கினார். இதையடுத்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வெற்றி வாகை சூடி தற்போது உச்ச நடிகராக வலம் வருகின்றார்.
இந்நிலையில் விஜய் நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை ஜூன் 22ஆம் தேதி கொண்டாட உள்ளார். இதையொட்டி திரைப்பிரபலங்கள் 48பேர் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். அந்த போஸ்டரை வெளியிட்டவர்களில் சிலர் லோகேஷ் கனகராஜ், வெங்கட்பிரபு, அஜய் ஞானமுத்து, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், மஞ்சு வாரியர்.