Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் ரசிகர்கள் மிகவும் விசுவாசமாக உள்ளார்கள்”…. போனி கபூர் பேட்டி…. கொண்டாடும் தளபதி ரசிகர்கள்….!!!

வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர்  பேட்டி கொடுத்ததை தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் விளங்குகிறார்கள். மேலும் இவர்களது ரசிகர்களின்  சண்டைகள் கடந்த சில வருடங்களாக பெரிய விஷயமாக இருந்தது. இவர்களின் சண்டைகள் மோசமான நிலைமைக்கு சென்றதால் திரைப்பிரபலங்கள் அஜித்-விஜய் இருவரும் தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல பேட்டிகள் கொடுத்து வந்தனர். தற்போது இப்படிப்பட்ட சண்டைகள் இல்லை. இந்நிலையில் அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இதற்கான புரோமோஷன்கள் எல்லாம் பலமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் எதிர்பாராத வகையில் டீசர்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் விஜய் ரசிகர்கள் குறித்து தெரிவித்துள்ளதாவது: “நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மிகவும் விசுவாசமாக உள்ளார்கள். தற்போது அஜித்தின் வலிமை படத்தைக்கூட பாராட்டுகிறார்கள்”  என பேட்டி கொடுத்துள்ளார். அதை தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |