Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய்- லோகேஷ் இணையும் தளபதி-67… படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஜூன் 3 ஆம் தேதியன்று வெளியான இந்த திரைப்படம் மூன்று நாட்களில் 150 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் அறிவிப்பு விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் அடுத்த இந்தக் காம்போவு-க்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்கில் உள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறாராம். மேலும் இவர் 49 வயதான நபராகவும் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் படத்தில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லை. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் உருவாகும் என பேசப்பட்டு வருகின்றது.

Categories

Tech |