லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 திரைப்படம் குறித்து இயக்குனர் ரத்தினகுமார் பேசியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. அண்மையில் வெளியான படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் விஜய் அமர்ந்திருக்கும் போஸ்டரில் உள்ள பைக்கானது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இத்திரைப்படத்தையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் வசனங்கள் எழுதிய லோகேஷின் நெருங்கிய நண்பரான இயக்குனர் ரத்தினகுமார் தளபதி 67 திரைப்படம் குறித்து பேசி உள்ளார். தளபதி 67 படம் இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமையும் எனவும் இது முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகும் எனவும் கூறியுள்ளார். இதை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் குறிப்பிடத்தக்கது.