தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய் வீட்டிற்குள் தன்னை அனுமதிக்கவில்லை என ஷாஜகான் பட நடிகர் கிருஷ்ணா திவாகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஷாஜகான் படம் முடிந்த பின்பு படிக்கச் சென்று விட்டேன். இப்போது மலையாளத்தில் நடித்து வரும் எனக்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால் விஜய்யை சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றேன்.
ஆனால் அங்கிருந்த செக்யூரிட்டி என்னை அனுமதிக்கவில்லை. நான் அவருடன் நடித்தவர் என்று கூறினாலும் என்னை வெளியே அனுப்பினார். அங்கிருந்து நான் வேதனையுடன் திரும்பினேன். எப்படியாவது விரைவில் நடிகர் விஜய்யை சந்திப்பேன் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மிக விரைவில் தமிழிலும் நடிப்பேன் என வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.