Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே… தமிழக அணி அறிவிப்பு… நடராஜனுக்கு இடம்…!!!

விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணியில் யாக்கர் கிங் நடராஜன் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் நடந்து முடிந்தது. அந்தப் போட்டியில் தமிழக அணி மகுடம் சூடியது. இதனையடுத்து விஜயா ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் போட்டிக்கான தமிழக அணியை கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டியினர் நேற்று அறிவித்தனர். அதில் இந்திய அணியின் இடத்தை வேகப்பந்து வீச்சாளரான சேலம் சின்னப்பம்பட்டி சேர்ந்த நடராஜன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அதன்படிவிஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இடம் பெற்றுள்ளார். மேலும் யாக்கர் கிங் நடராஜன் அந்த அணியில் இடம்பெற்றுள்ளார். பாபா அபராஜித், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், ஜெகதீசன், சூரிய பிரகாஷ், கௌசிக் காந்தி, கௌஷிக், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், சித்தார்த், சோனி யாதவ், விக்னேஷ், அஸ்வின் கிரிஸ்ட், பிரதோஷ், பெரியசாமி, முகமது ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Categories

Tech |