Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் VS அஜித் படங்கள்…. பொங்கலுக்கு ரிலீஸ்…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

2023 ஆம் வருடத்தின் முதல் பெரிய ரிலீசாக பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் இருக்கப்போகிறது. அன்றையதினம் தமிழ் திரையுலகில் அதிக இளம் ரசிகர்களை தங்களது வசம் வைத்துள்ள விஜய், அஜித் போன்றோரது படங்கள் வெளியாகிறது. விஜய் நடிக்கும் வாரிசு, அஜித்தின் துணிவு போன்ற 2 திரைப்படங்களும் தமிழகத்தில் உள்ள அத்தனை தியேட்டர்களை ஆக்கிரமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவர்கள் 2 பேரின் படங்களும் கடைசியாக 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நேரடியாக மோதியது. சென்ற 8 ஆண்டுகளில் இருவரது பிரபலம், இமேஜ், புகழ் போன்றவை இன்னும் அதிகரித்து உள்ளது. அதன்பின் அவர்கள் கொடுத்த சில ஹிட்டுக்கள் தமிழ் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த படங்களாகவும் இருந்தது. இந்த நிலையில் துணிவு, வாரிசு போன்ற திரைப்படங்களின் வியாபாரம் மும்முரமாக ஆரம்பமாகி இருக்கிறது. இதில் துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வாங்கி விட்டது.

அதேபோல் வாரிசு திரைப்படத்திற்கும் அந்நிறுவனமே தியேட்டர்களை போட்டுத்தர இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது. அண்மையில்கூட பொன்னியின் செல்வன் படத்திற்கும் அப்படித் தான் செய்தார்களாம். வாரிசு, துணிவு திரைப்படங்களின் அமெரிக்க வெளியீட்டு உரிமை உள்பட வெளிநாட்டு உரிமைகள், மற்றமாநில உரிமைகள் போன்றவற்றிற்கான வியாபாரம் ஆரம்பமாகி விட்டதாக கோலிவுட்டில் பரபரக்கின்றனர். அடுத்த சில தினங்களுக்கு இந்த ஏரியா இத்தனை கோடி, அந்த ஏரியா அத்தனை கோடி என தகவல்கள் வந்துகொண்டே இருக்கும்.

Categories

Tech |