கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நம் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தான் நம் நாட்டின் சொத்து எனவும் தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்கா இணைந்து நடத்தும் பெரும் சவால்கள் என்ற தலைப்பிலான மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தியாவில் மிகவும் வலிமையான மற்றும் உயிர்ப்புடன் கூடிய அறிவியல் சமூகம் உள்ளதாகவும் மிகச்சிறந்த அறிவியல் கல்வி நிறுவனங்களும் உள்ளதாகவும் தெரிவித்தார். சில மாதங்களாக கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இருந்து அதற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது வரை நமது விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர் திரு. மோடி அவர்கள் தான் இந்தியாவின் சொத்து எனவும் அவர்களது முயற்சிகளால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை கொரோனா வைரஸ் நமக்கு உணர்த்திக் உள்ளதாகவும் கூறினார்.