முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம் என்று சென்னை அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தந்த தல தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. ஐபிஎல்லில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 9 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது சென்னை அணி.. இதில் 2010, 2011, 2018, 2021 ஆகிய 4 ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை அணி…
ஏற்கனவே தோனி அனைத்து வகையான கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்து விட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் அடுத்த வருடம் ஆடுவாரா என்பது பெரிய சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.. அவர் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது..
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால் அவரின் ஆட்டத்தை ஐபிஎல் போட்டியின் மூலமே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.. ஆகவே கேப்டன் தோனி மீண்டும் சென்னை அணிக்கு ஆடுவாரா சென்னை அணிக்காகவே அவர் தொடர்வாரா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை அணியில் முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் கப்பலுக்கு தலைவன் தேவை.. அவர் மீண்டும் அடுத்த ஆண்டு சிஎஸ்கேவுக்கு விளையாடுவார் என அந்த அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது..
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 அணிகள் வருகிறது. இதனால் பெரிய அளவில் ஏலம் நடைபெறும்.. ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளலாம்.. சென்னை அணியில் தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதால் இன்னும் 2 பேர் யார் என்பது பற்றி தெரியவில்லை.. ஒருவேளை ஜடேஜா இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது..