ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இரண்டு மாநிலங்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Baden-Württemberg மற்றும் Mecklenburg-West Pomerania ஆகிய இரண்டு மாநிலங்களில் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிகை அலங்கார கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் அவசரகால நடவடிக்கையின் படி இந்த புதிய திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்க்கு(66) ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இன்று போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.