மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை காட்டு யானை விடாமல் துரத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்வில் வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விவசாயியான நாகராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் கேர்மாளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று சாலையில் நிற்பதை பார்த்ததும் நாகராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு நாகராஜ் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் யானை அவரை விடாமல் துரத்தி சென்றுள்ளது. அந்த சமயம் அவ்வழியாக வந்த சரக்கு வண்டியில் ஏறி நாகராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். அந்த யானை சுமார் 15 நிமிடம் அங்கும் இங்கும் அலைந்து விட்டு பின் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.