Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்தி சென்ற விலங்கு…. படுகாயமடைந்த அலறி துடித்த வாலிபர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவர்க்கல் மலைவாழ் கிராமத்தில் சிவபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சிவபிரகாஷ் குடியிருப்பு பகுதிக்கு அருகே இருக்கும் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஓடி வந்த காட்டெருமை சிவபிரகாஷை விடாமல் துரத்தி சென்று முட்டி தாக்கியது.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி சிவபிரகாஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது தலை, கால் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு காதிலிருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவபிரகாஷ் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |