Categories
உலக செய்திகள்

விடாமல் துரத்தும் கொரோனா…. நாளொன்றுக்கு 100க்கு மேல் மதிப்பு… அவதிப்படும் சீனா…!!

சீனா தொடர்ந்து மூன்றாவது நாளாக 100-க்கும் மேலான புதிய தொற்றுநோய்களை பதிவு செய்திருக்கிறது.

உலகம் முழுவதிலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள 6,75,757  பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதே சமயத்தில் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,74,53,103 ஆக உள்ளது. இதில் 10,921,667 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 66,467 பேர் கொரோனா பாதிப்பால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 1464 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை ஆனது 1.44 லட்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 68 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46.34 லட்சத்தை தாண்டி இருக்கிறது.கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது 22.83 லட்சத்தை கடந்திருக்கிறது. சீனாவில் நேற்று 127 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் இன்று காலை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 100-க்கும் மேலானோர் புதிய தொற்றுநோய்களை பதிவு செய்துள்ளனர். இத்தகைய புதிய தொற்று நோய் பாதிப்புகள் 123 உள்நாட்டில் பரவியுள்ளது. மேலும் 112 தொலைதூர மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கிலும், மீதமுள்ள எண்ணிக்கை வடகிழக்கு மாகாணமான லியாவோனிங்கிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |