Categories
லைப் ஸ்டைல்

விடாமல் வரும் விக்கல்… இதனை செய்தால் சில நொடியில் நின்றுவிடும்…!!!

தினமும் விடாமல் விக்கல் ஏற்படுபவர்கள் இதனை செய்தால் சில வினாடிகளில் விக்கல் நின்றுவிடும்.

ஒருவருக்கு விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தல் அதற்கான முக்கிய காரணம். உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு உள்ளது. அந்த கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அந்த கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்திசையில் உணவுக் குழாய்க்கு செல்கிறது.

உணவுக்குழாய் சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதால் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டல கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றால் ஏற்படும். இப்படி விடாமல் எடுக்கும் விக்கலை நிறுத்துவதற்கு முதலுதவியாக சில கை வைத்தியங்கள் உள்ளன.

சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும். பாலித்தீன் பைக்குள் சுவாசித்தால் விக்கல் நிற்கும். இவற்றை சில நொடிகள் மட்டுமே செய்ய வேண்டும். ஏனெனில் பாலித்தீன் பைக்குள் இருக்கிற ஆக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துபோய் கார்பன் டை ஆக்சைடு சுவாசிக்க நேரும் போது விக்கல் நிற்கும். இதுபோன்ற கை வைத்தியங்களுக்கு விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவத் தீர்வை நாடுவது நல்லது.

Categories

Tech |