Categories
சினிமா

விடாமுயற்சியால் ஜெயித்தவர்…. குடியால் கேட்டது வாழ்க்கை…. பிரபல நடிகருக்காக புலம்பும் ரசிகர்கள்….!!

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் கலாபவன் மணி தனது சிறுவயது முதலே நடிப்பு மற்றும் மிமிக்ரி மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது கருப்பான தோற்றம் காரணமாக பலமுறை நிராகரிக்கப்பட்டார். இதனிடையே இவரது முயற்சிக்கு பலன் அளிக்கும் விதமாக கலாபவனம் கூத்துப்பட்டறையில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கலாபவன் மணி மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிரபலமாகத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ஒன்றில் ஆட்டோ ஓட்டுனராக அறிமுகமான இவருக்கு ஜெமினி படத்தில் விக்ரமிற்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்கள் கிடைத்தனர். இவ்வாறு சினிமாத்துறையில் புகழ் பெற்ற இவர் 2016ஆம் வருடம் மார்ச் மாதம் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கலாபவன் மணி உயிரிழந்து விட்டதாக கூறிய நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது அதிகமாக மது அருந்தியதுதான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது. விடாமுயற்சியால் திரையுலகில் புகழ்பெற்ற கலாபவன் மணி குடியால் தனது வாழ்க்கையை அழித்துக் கொண்டது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |