அமெரிக்காவில் ஒருவர் 40 முறை கூகுளில் வேலைக்கு முயற்சித்து வெற்றி பெற்ற பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்கா நாட்டில் சான் பிரான்சிஸ்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் டைலர் கோஹென் என்ற நபர் வசித்து வருகின்றார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இணை மேலாளராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கோஹென் தனக்கு பிடித்தமான google நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்காக கூகுளில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வருத்தமடைந்த அவர் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார்.
இந்நிலையில் மொத்தம் 39 முறை அவர் விண்ணப்பித்துள்ளார் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி அவரது 40வது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை அறிந்த கோஹென் சந்தோசத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வேலைக்காக விண்ணப்பித்ததை Screenshot ஆக எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும் அவரது விட முயற்சியை பாராட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது டைலர் கோஹெனின் அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.