Categories
உலக செய்திகள்

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி…. கால்களை இழந்த வீரரின் சாதனை….!!

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தனது ஒற்றை காலை இழந்த மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்து சிறந்த நீச்சல் வீரராக சாதனை படைத்துள்ளார்.

ஈராக் நாட்டின்  வடக்கு பகுதியில் உள்ள பாக்தாத் எனும் இடத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பு சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத் தனது ஒரு காலை இழந்துள்ளார். அவருக்கு சிறந்த கால்பந்து வீரராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தன்னுடைய 17 வயதிலேயே தனது காலை இழந்ததால் அவரது லட்சியம் சிதைந்து போனது. ஆனாலும் அவர் விடாமுயற்சியுடன் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு மாவட்ட  அளவிலான நீச்சல் போட்டிகளில் பல வெற்றிகளை குவித்தார்.

இதைத்தொடர்ந்து  2018 ஆம் ஆண்டு ஈராக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து உலக சாதனை புரிந்தார். இது குறித்து மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத் கூறியதாவது “உலக அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று  எனது நாட்டின் கொடியை சுமந்து செல்வதே என்னுடைய கனவு ஆகும். மேலும் நீச்சல் போட்டிகளில் சிறந்த வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் தான் தனக்கு விருப்பமான வீரர். அவருக்கு அடுத்த இடத்தை பிடிப்பதே எனது கனவு” என அவர் கூறியுள்ளார்.  இவ்வாறு விடாமுயற்சியுடன் செயல்பட்டு உலக சாதனை படைத்த மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத் இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துகாட்டாக திகழ்கிறார்.

Categories

Tech |