Categories
அரசியல் மாநில செய்திகள்

“விடியட்டும் தமிழகம்!, மலரட்டும் தாமரை”… பரபரப்பு போஸ்டர்கள்…!!!

நடிகர் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான்செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் பாஜகவின் B டீம் மாதிரி தான் செயல் படுவார் என்று பலரும் விமர்சனம் செய்தனர். இதனை உறுதி செய்யும் வகையில் ராஜபாளையம் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், “விடியட்டும் தமிழகம்! மலரட்டும் தாமரை!!!” என்ற வாசகம் இடம் பிடித்துள்ளது. இந்த போஸ்டர்களை உண்மையாகவே ரஜினி ரசிகர்கள் தான் ஒட்டினார்களா அல்லது வேறு யாராவது ஒட்டினார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |