சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய குற்றத்திற்காக 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் எம்.ஆர் நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த சட்டக் கல்லூரி மாணவரான அப்துல் ரஹிம் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் வைத்து அப்துல் ரஹீமை விடிய விடிய சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்துல்ரஹீம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தியுள்ளார். அதன்பிறகு போலீஸ் ஏட்டு பூமிநாதன், போலீஸ்காரர் உத்திரகுமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.