Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை…. 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!!

தொடர்ந்து மழை பெய்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் கடலூரில் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர், நவநீதம் நகர், சக்தி நகர், ஜனார்த்தனநகர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளம், மஞ்சக்குப்பம் வில்வ நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அண்ணாமலை நகர், சிதம்பரம், வானமாதேவி, லக்கூர் போன்ற பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

Categories

Tech |