கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுக்க இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஸ்ரீபதி நகர், குனியமுத்தூர் அம்மன் கோவில் வீதி, தடாகம் ரோடு, போத்தனூர் ரோடு உள்ளிட்ட மாநகராட்சி சாலைகள் சேரும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் பொம்மன்பாளையம் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த நிவேஷா(17) என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது தாய் கனகலட்சுமி, அண்ணன் ரமேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். நிவேதா சிமெண்ட் சீட் போட்ட பாத்ரூமில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்த போது கனமழை காரணமாக அருகே இருந்த 2 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாத மண் சுவரால் ஆன வீடு இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த நிவேதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.