அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு தெருவில் பெண் ஒருவர் காரில் தொங்கியபடி இழுத்து செல்லப்பட்டார் .
அமெரிக்காவில் உள்ள ஓக்லாண்ட் பகுதியில் இன்டர்நேஷனல் போலெவர்ட் மற்றும் 9th அவென்யூவில் உள்ள அழகு பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திலிருந்து வந்த ஒரு பெண்ணிடம் பணப்பையை ஒரு திருட்டு கும்பல் பறித்துள்ளது. வெள்ளை நிற காரில் வந்த அந்த திருட்டு கும்பல் அந்தப் பெண்ணிடம் பணப்பையை பறிக்கும் போது அந்த பெண் பையை இறுக்கமாக பிடித்ததால் அவரையும் சேர்த்து தரதரவென்று நடுரோட்டில் இழுத்து சென்றுள்ளனர்.
Woman dragged by car about 100 feet near 9th & International after having her purse snatched. @oaklandpoliceca investigating pic.twitter.com/jSsw0VQieH
— Henry K. Lee (@henrykleeKTVU) February 26, 2021
பணப்பையை எப்படியாவது அவர்களிடமிருந்து மீட்க அந்தப் பையை பிடித்துக்கொண்டு 100 மீட்டர் வரை காரில் தொங்கியபடியே அப்பெண் சென்றுள்ளார். ஆனால் உள்ளே இருந்த ஒருவர் அப்பெண்ணை தள்ளிவிட்டதால் கீழே விழுந்துள்ளார் .மேலும் அப்பெண்ணிற்கு எந்தவித காயமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நடந்துள்ளது. அந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் அருகிலிருந்த கடையிலிருந்து கிடைத்துள்ளது.போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்