சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று விடுதலையானார்.
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது . இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை தற்போது முன்னேறியுள்ளதாகவும், சுவாசக் கருவிகள் உதவியின்றி அவர் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து சசிகலா உடனடியாக இன்று தமிழகம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் இதுதொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் நன்கு குணமடைந்த பின்னரே தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், மருத்துவமனையில் இருந்து தமிழகம் வரும்போது அவருக்கு முழுபோலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.