Categories
தேசிய செய்திகள்

“விடுதலையான பிறகு ஏழை, எளிய மக்களுக்கு உதவுவேன்”… விசாரணையில் கூறிய ஆரியன் கான்… வெளியான தகவல்…!!!

ஜெயிலை விட்டு வெளியில் வந்த பிறகு ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவப் போவதாக ஆரியன் கான் விசாரணையின் போது தெரிவித்ததாக போதை தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் சேர்த்து 8 பேரை போதை தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பின்னர் அவர் மும்பையில் உள்ள பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரியன் கான் மீதான ஜாமீன் மனு வருகிற 20-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆரியன் கான் தரப்பில், நடிகர் சல்மான் கானை வழக்கில் இருந்து வெளியில் கொண்டு வந்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் வாதாடி வருகிறார். எப்படியும் வரும் 20ஆம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆரியன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரிடம் நடத்திய விசாரணையின் போது தான் விடுதலையான பிறகு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவுவேன் என்று அவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தாங்கள் என்னை பெருமைப்படுத்தும் வகையில் ஒன்றை செய்வேன் எனவும், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக எதையாவது செய்வேன் என்றும், எதிர்காலத்தில் தனது பெயரைக் கெடுக்கும்படி நான் எந்த செயலையும் செய்ய மாட்டேன் என்று அதிகாரி சமீர் வான்கடேவிடம் ஆரியன் தெரிவித்ததாக செய்தி வெளியாகி வருகின்றது.

Categories

Tech |