செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார்.எந்த அளவிற்கு உறுதிப்பாட்டோடு இந்த களத்தில் நாம் நிற்கிறோம், கொள்கை மாறாமல் நாம் நிற்கிறோம், கோட்பாடு சிதையாமல் நிற்கிறோம், தேர்தல் அரசியல் என்பதற்காக எல்லாவற்றிற்கும் சமரசம் செய்து கொள்ளாமல் தேர்தல் அரசியல் களத்திலும் சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடித்து இருக்கின்ற ஒரே இயக்கம் இந்திய மண்ணில் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.
சனாதனத்தை சீண்டுபவர்கள் சாதாரணமான சீண்டிவிட முடியாது. ஏனென்றால் அது மிகவும் ஆபத்தான ஒரு அரசியல், சனாதன எதிர்ப்பு அரசியல் ரொம்ப ரொம்ப ஆபத்தான அரசியல். பெரியார் அதனால் தான் நான் தேர்தல் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் அங்கே சென்றால் இங்கே இந்த அளவிற்கு கடுமையாக எதிர்க்க முடியாது.
தேர்தல் அரசியல் போனால் கடுமையாக எதிர்க்க முடியாது. நான் கடைசி மூச்சி வரைக்கும் இறுதி மூச்சு வரையில் நான் எதிர்க்க வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தேர்தல் அரசியலில் இருந்தும் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். இரண்டு பேருடைய நோக்கம் ஒன்றுதான் சனாதனத்தை எதிர்ப்பது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தேர்தல் களத்தில் இருந்து கொண்டே சனாதன சக்திகளை தோலுரித்தார். எந்த நிலையிலும் துளி அளவும் கூட யாரோடும் சமரசம் ஆகக்கூடாது அதற்கு இடம் தந்து விடக்கூடாது என்கின்ற அடிப்படையில் தந்தை பெரியார் அவர்கள் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார்.
தேர்தல் அரசியல் பக்கம் வரவே இல்லை, பதவிகள் தேடி வந்தபோது கூட ஏற்றுக் கொள்ளவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் பதவியிலிருந்தும் அதை தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தார். ஒரு கட்டத்தில் பதவியை பயன்படுத்தி, அதிகாரத்தை பயன்படுத்தி, செய்ய வேண்டியவற்றை செய்தார். எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்து விட்டு இந்த பதவி எனக்கு தேவை இல்லை என்று மத்திய அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தார் என திருமாவளவன் தெரிவித்தார்.