Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் “மர்மமாக இறப்பு”…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன எர்ணாவூர் 4-வது தெருவில் பெயிண்டரான தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவொற்றியூர் தொகுதி துணை செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனசேகர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக தனசேகரின் வீடு பூட்டியே கிடந்தது. நேற்று முன்தினம் காலை தனசேகருக்கு கடன் கொடுத்த 2 பேர் வீட்டிற்கு சென்றபோது துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் தனசேகர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசார் தனசேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |