கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்கள் மூலம் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார்.
படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஒரு பிரபலத்தை வைத்து பாட வைக்கலாம் என்று வெற்றிமாறனும், இளையராஜாவும் முடிவு செய்தனர். அதன்படி இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இதனால் அப் பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.